நீ – 111
(nee)
This story is part of a series:
”கொஞ்சம்.. விட்டுக்குடுத்து போங்க..! எனக்காகங்க… நான் என்னிக்கும் உங்க அடிமைதாங்க… ஆனா நீங்களும் நிம்மதியா வாழனுங்களே..! நீங்க நிம்மதியா இல்லாம.. நான் எப்படிங்க…? நான் சொல்றத.. கொஞ்சம் யோசிங்க…” என்று கெஞ்சினாய்.
நான் அமைதியானேன்.
”என்னை அடிக்கறதுனா.. அடிச்சிருங்க..! நான் வாங்கிக்கறேன்..! ஆனாக்கா.. நான் சொல்றதையும் கொஞ்சம் யோசிங்க… நான் உங்களுக்கு கெடுதல் நெனைப்பேனு தோணுதுங்களா… உங்களுக்கு…?” என்றபோது உன் குரல் உடைந்து.. அழுது விட்டாய்.
”ஏய்.. ச்சீ.. நீ எதுக்குடி அழற.. அழாத.. ” என்று உன்னை இழுத்து அணைத்துக் கொண்டேன்.
”எனக்காகங்க… ப்ளீஸ்ங்க…”
நான் சிரித்துவிட்டேன்.
”ம்ம்.. நீ கூட இங்கிலீஸ்லாம் பேசற போலருக்கு…”
”எனக்கு எப்படி கேக்கறதுனு தெரியலீங்க..! அக்கா இருந்தாத்தாங்க… நாம மூனு பேருமே நிம்மதியா வாழ முடியும்..!” என மூக்கை உறிஞ்சினாய்.
”சரி… என்ன பண்ணனும்ங்கற..?”
” அக்காவ மன்னிச்சிருங்க…”
”மன்னிக்கறது பெரிய விசயம் இல்லடி…”
”அப்பறம்.. வேற.. என்னங்க..?” என்றாய்.
பெருமூச்சுவிட்டேன். ”என் மனசு கொஞ்சம் ஆறனும்..!!”
”அதுக்கு.. என்னங்க பண்றது..?” என்று அப்பாவியாகக் கேட்டாய்.
உன் தலையைத் தடவினேன்.
”இப்போதைக்கு அவ இங்க வேண்டாம்..! கொஞ்ச நாள்.. அவ அம்மா வீட்லயே இருக்கட்டும்..!!” என்றதும் உன் முகம் மலர்ந்து விட்டது.
”ஐயோ. .. மன்னிச்சிட்டிங்கதாங்க..?”
” மன்னிப்புங்கறது பெரிய விசயம்டி..! அவள மன்னிக்கற அளவுக்கு நான் தகுதியானவன் இல்ல..! ஆனா.. மனசுல பட்ட.. காயம்… அது உடனே ஆறடாது..? கொஞ்ச நாள் போகனும்..! அதுவரை… அவ அம்மா வீட்லயே இருக்கட்டும்.. அவள நான் இப்போதைக்கு பாக்காம இருக்கறதுதான் நல்லது..! நேர்ல பாத்தா… கோபத்துல ஏதாவது பேசிருவேன்..!!” என்றேன்.
உன் மகிழ்ச்சி கரைபுரண்டு விட்டது.
”ஐயோ.. இப்பதாங்க.. எனக்கு நிம்மதியா இருக்கு…” என்று என் முகமெங்கும் முத்தங்களைப் பதித்தாய்.
நான் அமைதியாக படுத்துக் கிடந்தேன்.
என்னை இருகத் தழுவிக்கொண்டு..
” போதுங்க… போதுங்க.. இது ஒன்னு போதுங்க.. எனக்கு..! இந்த சந்தோசம் போதுங்க..! எனக்காக நீங்க வேற எதுவும் பண்ண வேண்டாங்க.. சாகறவரை.. நான் உங்க காலடியே… நாய் மாதிரி கெடப்பங்க…” என்று உளறினாய்.
”ஏய்.. லூசு…” என்று உன் கன்னம் தடவினேன் ”இப்படி பேசாதேனு உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்..? நீயும் என் பொண்டாட்டிதான்.. அடிமை கெடையாது..!”
”நான் ஏதாவது தப்பா பேசிருந்தா.. என்னை மன்னிச்சிருங்க..! எனக்கு அந்தளவுக்கெல்லாம் பேசத்தெரியாதுங்க..!” என்று குழைந்தாய்…..!!!!
-சொல்லுவேன்…….!!!!!
What did you think of this story??
Comments